உறையப்போகும் சென்னை: இனிமே இப்படித்தான் இருக்குமாம்!
குளிர் காற்று அதிகரித்து கடும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைபொழிவை அதிகம் எதிர்பார்க்கலாம். வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை நிலப்பகுதிக்கு வரவில்லை.
தாழ்வு நிலையும் வலுவிழந்து காணாமல் போனது. இந்த சூழலில், பனிப்பொழிவு, கடும் குளிர் தான் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு வட துருவத்தில் இருந்து வீசும் காற்று தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடும் பனிப்பொழிவு
இதுதொடர்பாக சில வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் வரும் நாட்களில் அதிகாலை தொடங்கி காலை 9 மணி வரை பனிப்பொழிவு நீடிக்கும். அடுத்த 10 நாட்களுக்கு வடகிழக்கு பருவக் காற்று வீசுவது படிப்படியாக குறையக்கூடும்.
இதனால் டிசம்பர் மாதம் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.