‘’இதெல்லாம் எப்படித்தான் ப்ரஸ் மீட்ல சொல்றாங்களோ" - வானிலை மையத்தை விமர்சிக்கும் வெதர்மேன்

chennairain tamilnaduweatherman pradeepjohn
By Irumporai Nov 29, 2021 11:47 AM GMT
Report

சென்னையில் பெய்த மழையானது 100 செ.மீ., மழையளவைத் தாண்டவில்லை என்று வானிலை மையம் கூறிய நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பரபரப்பான கருத்தை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக  பிரதீப் ஜான்அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் 100 செ.மீ மழை  என்று ஐ.எம்.டி கூறும்போது, சிரபுஞ்சி அல்லது மவ்சின்ராம் உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் இல்லை என்று சொல்வது போல் இருக்கிறது.

ஏனெனில் கிழக்கு காசி மலை மாவட்டத்தின் சராசரி 10000 மிமீ இல்லை என்பதால், சிரபுஞ்சி, மவ்சின்ராம் பகுதியும் அப்படியானது இல்லை என சொல்வதுபோல் உள்ளது. தரவுகள் பொய் சொல்லாது. இதை எப்படி வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்ல முடியும்’ என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.