4 மாத கர்ப்பம்..ஆனா? கல்யாணம் ஆகி ஒரு மாதம்தான் - அதிர்ச்சியில் கணவர்!
வயிறுவலி எனக் கூறிய மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதை கேட்டு அதிர்ச்சியுற்ற கணவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
தம்பதி
உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அந்த கணவர். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருக்கிறது.
இந்த நிலையில், மனைவி தனக்கு வயிறு வலி எனக் கூறியதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அந்த பெண் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.
வயிறு வலி
இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளான கணவரும் அவரது பெற்றோரும் அந்த பெண்ணை தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் விட்டுவிட்டு, பெண்ணின் மீதும் அவரது பெற்றோர் மீது போலீசில் புகாரளித்திருக்கிறார்.
அதில், திருமணமாகி ஒன்றரை மாதம்தான் ஆகியிருக்கிறது. இன்னும் திருமண பந்தத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பே நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்.
கர்ப்பம்
அந்த பெண்ணாலும், பெண் வீட்டாராலும் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்பதை மறைத்துதான் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள் என புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
இந்த புகாரை ஏற்ற குல்ஹுய் பகுதி காவல்நிலைய அதிகாரி அபிஷேக் சிங், இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவ அது பேசுபொருளாகியிருக்கிறது.
ஒரே நளில் பார்த்து பேசி அரங்கேறிய திருமணம்... முதலிரவில் செக் வைத்து பணத்துடன் மாயமான பெண்!