Monday, Jun 2, 2025

ஒரு நாளைக்கு குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கலாம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

Pregnancy Breastfeeding
By Sumathi a year ago
Report

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த முக்கிய தகவலை பார்ப்போம்.

பிறந்த குழந்தை

குழந்தையை சரியான முறையில் பராமரிப்பதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பது வழக்கம்.

ஒரு நாளைக்கு குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கலாம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க.. | Newborn Baby Breastfeeding Details

அதனை உறவினர்களிடமோ, மருத்துவர்களிடமோ ஆலோசித்து தெரிந்துக் கொள்ளலாம். இதில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்பதை அறிந்திருப்போம்.

தாய்ப்பால் தானம்... 1600 லிட்டர் கொடுத்து அமெரிக்க பெண் உலக சாதனை!

தாய்ப்பால் தானம்... 1600 லிட்டர் கொடுத்து அமெரிக்க பெண் உலக சாதனை!

தாய்ப்பால் முக்கியம்

மேலும், வயிற்றுப்போக்கு, ரத்த சோகை, சத்துக் குறைபாடு, நிமோனியா, ஒவ்வாமை, பூச்சிப் பற்கள், உள்ளிட்ட உடல் உபாதை தொடர்பான பல பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்.

ஒரு நாளைக்கு குழந்தைக்கு எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கலாம் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க.. | Newborn Baby Breastfeeding Details

இதில், குழந்தைக்கு தேவையான 100 சதவீத சத்துக்கள் கிடைக்கிறது. அடுத்த 6 மாதங்களில் 50 சதவீத சத்து குழந்தைக்கு கிடைக்கிறது. பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம்.

முதல் ஆறு மாதத்தில் குழந்தைக்கு ஒரு நாளைக்கு 8-12 முறை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. எப்போதெல்லாம் பசி ஏற்படுகிறது என்பதை அறிந்தும் கொடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.