தாய்ப்பால் தானம்... 1600 லிட்டர் கொடுத்து அமெரிக்க பெண் உலக சாதனை!
அமெரிக்காவில் பெண் ஒருவர் தாய் பால் வழங்கி கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
தாய்ப்பால் தானம்
அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. இவருக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோயின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது.

இது சராசரியாக சுரப்பதனை விட 8 முதல் 10 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இதனை வீண் செய்வதை இவர் விரும்பவில்லை அதனால் தானம் செய்ய முடிவு செய்தார். இவரை தாய்ப்பால் தெய்வம் என்றும் அழைக்கின்றனர்.
கின்னஸ் சாதனை
இந்நிலையில், இவருக்கு 2014-ம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது. அது வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார். 2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார்.

குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார். கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,599.68 லிட்டர் ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil