மசோதாவை கிழித்தெரிந்த பெண் எம்பி; அவ்வளவு ஆக்ரோஷம் - அதிரவைத்த வீடியோ!

Viral Video New Zealand
By Sumathi Nov 15, 2024 12:30 PM GMT
Report

பழங்குடியின பெண் எம்பி மசோதாவை கிழித்தெரிந்த வீடியோ வைரலாகி வருகிறது.

எம்பி ஹானா

பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது ஆங்கிலேயே அதிகாரிகளுக்கும் நியூசிலாந்தின் பூர்வக்குடிகளான மவோரி இன தலைவர்களுக்கும் இடையே வைதாங்கி ஒப்பந்தம் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.

mp hana

அதன்படி, மாவோரி பழங்குடியினர் தங்கள் நிலங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஆங்கிலேயேர்களிடம் ஆட்சியை வழங்காமல் தங்கள் நலன்களை பாதுகாத்து கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டன.

வெள்ளை மாளிகையில் தங்க விரும்பாத ட்ரம்ப்பின் மனைவி - என்ன காரணம் தெரியுமா?

வெள்ளை மாளிகையில் தங்க விரும்பாத ட்ரம்ப்பின் மனைவி - என்ன காரணம் தெரியுமா?

மசோதாவுக்கு எதிர்ப்பு

ஆனால், மவோரி மக்கள் நலன்கள் மீதான முடிவுகளை இனி நாடாளுமன்றம் எடுக்கும் வகையில் வைதாங்கி ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் நியூசிலாந்து தேசியக்கட்சிக்கு பெரிய உடன்பாடு இல்லாத போது, கூட்டணி ஒப்பந்தத்தின் படி ACT New Zealand கட்சியின் கோரிக்கையை ஏற்று இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த எம்பியான ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க், மசோதா நகலை கிழிந்தெறிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

அவருடன் பிற மபோரி எம்.பி.க்களும், பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மவோரி இன மக்களும் haka போர் முழுக்கத்தை எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.