170 ஆண்டுகளில் முதன்முறை; நாடாளுமன்றத்தை அதிரவிட்ட இளம் பெண் எம்.பி - வைரல் Video!
21 வயது பெண் எம்.பி நியூசிலாந்தில் உள்ள மவோரி மக்களின் நடனமான மவோரி ஹக்காவை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்
இளம் பெண் எம்.பி
நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஹவுரகி வைகாடோ என்ற மௌரி பழங்குடியினர் தொகுதியிலிருந்து 'ஹானா ரவ்ஹிடி மைபி கிளார்க்' என்ற 21 வயது இளம்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 170 ஆண்டுகளில் அந்த நாட்டில் மிக இளவயதில் தேர்வு செய்யப்பட்ட முதல் எம்.பி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் மக்களின் பிரச்சனைகளை குறித்து ஹானா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தற்போது வைரலாகி வருகிறது. அதில் "நான் உங்களுக்காக சாகவும் தயார். ஆனால் உங்களுக்காக நான் வாழ்வேன்" என்று குறிப்பிட்டார்.
ஹக்கா நடனம்
பேசுவதற்கு முன் நியூசிலாந்தில் உள்ள மவோரி மக்களின் நடனமான மவோரி ஹக்காவை அவர் நிகழ்த்தினார். ஹக்கா நடனம் என்பது மௌரி பழங்குடியினரின் யுத்த நடமாகும்.
இந்த நடனம் அந்த இனக்குழுவின் போர், வெற்றி, ஒற்றுமை, பெருமை உள்ளிட்டவற்றை சித்தரிக்க பயன்படுகிறது. இந்த மக்கள் தங்கள் அனுபவங்களை வெறும் வார்த்தைகளாக மட்டுமின்றி, பன்முகப்பட்ட உடல் அசைவுகளாலும், முக அனுபவ சித்தரிப்புகளாலும் விளக்குகின்றனர். ஹானா ரவ்ஹிடி மைபி கிளார்க்' என்ற பெண் எம்.பி.யின் ஹக்கா நடனம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
New Zealand natives' speech in parliament pic.twitter.com/OkmYNm58Ke
— Enez Özen | Enezator (@Enezator) January 4, 2024