இதுதான் என் ஆடையில்லா ஃபோட்டோஸ் - நாடாளுமன்றத்தில் ஷாக் கொடுத்த பெண் எம்பி!

New Zealand
By Sumathi Jun 03, 2025 10:35 AM GMT
Report

 பெண் எம்பி ஒருவர் நிர்வாண படங்களை காட்டி பகீர் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

டீப் பேக் படங்கள்

நியூசிலாந்தில் உள்ள ஏசிடி கட்சியின் பெண் எம்பி லாரா மெக்லூர். இவர் தனது நிர்வாண படங்களைத் தானே நாடாளுமன்றத்தில் காட்டியிருக்கிறார். இது மிகப் பெரியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

எம்பி லாரா மெக்லூர்

இதுகுறித்து அவர் பேசுகையில், "இது என்னுடைய நிர்வாணப் படம். ஆனால் இது உண்மையானது இல்லை. எனது டீப் பேக் படங்களை உருவாக்க எனக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரமே ஆனது" என்று கூறினார்.

பின் இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "இதைச் செய்வது எவ்வளவு ஈஸி. இவை நியூசிலாந்து மக்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு எவ்வளவு தீங்கை விளைவிக்கலாம் என்பதை நான் மற்ற எம்பிக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இதை நான் செய்தேன்.

பெண் எம்பி காட்டம்

தொழில்நுட்பத்தால் இதில் பிரச்சினை இல்லை. அதை எப்படி ஒருவர் பயன்படுத்துகிறார் என்பதே பிரச்சினை. நமது சட்டங்கள் அதைச் சரியாகக் கையாள வேண்டும். அந்த படத்தை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டுமா என யோசித்தேன். அச்சமாகக் கூட இருந்தது. ஆனால் டீப் பேக் மூலம் எந்தளவுக்குப் பாதிப்புகள் ஏற்படும்.

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான விசா நிறுத்தி வைப்பு - காரணம் என்ன?

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கான விசா நிறுத்தி வைப்பு - காரணம் என்ன?

இதைச் சரியாகக் கையாள புதிய சட்டங்கள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை உணர்த்தவே அதைக் காட்டினேன். நியூசிலாந்தில் தற்போது இருக்கும் சட்டங்களை வைத்து டீப் பேக்கை கட்டுப்படுத்த முடியாது. டீப் பேக் டிஜிட்டல் மசோதா என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.

அது பழிவாங்கும் நோக்கில் ஆபாசப் படங்களை உருவாக்குவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பயன்படும். ஒருவரது ஒப்புதல் இல்லாமல் டீப் பேக்குகளை உருவாக்குவது அல்லது பகிர்வது குற்றமாக மாற்றும். பாதிக்கப்பட்டவர்கள் அந்த கண்டெண்டுகளை எப்படி அகற்றலாம் என்பது குறித்த தெளிவான வழிகளையும் வழங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.