2024: கொரோனா கட்டுப்பாடுகள் - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
ஒமிக்ரான் வைரஸ் ஜே.என்.1 ஆக உருமாறிய உள்ளது. இதன் பரவல் பெரிதாக இருந்தாலும் பாதிப்புகள் அதிகமாக இல்லை. கர்நாடகா மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்புகள் 568. பெங்களூருவில் 414. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், 2024 ஆங்கிலப் புத்தாண்டு வருகிறது. இதனையொட்டி, ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து கொண்டாடுவர். எனவே, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கட்டுப்பாடுகள்
முகக்கவசம் அணிய வேண்டும். போதிய இடைவெளியை பொது இடங்களில் பின்பற்ற வேண்டும். சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம். 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்,
துணை நோய்கள் இருப்பவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இவற்றை கட்டுப்பாடுகளாக கருத வேண்டாம். சுய கட்டுப்பாடாக எடுத்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.