Friday, Jul 4, 2025

இனி.. நண்பர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் கடும் தண்டனை - அமைச்சகம் உத்தரவு!

Indian Railways
By Sumathi a year ago
Report

ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு

போக்குவரத்துகளில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக ரயிலில் டிக்கெட் கிடைப்பது சற்று கடினமாக உள்ளது.

இனி.. நண்பர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் கடும் தண்டனை - அமைச்சகம் உத்தரவு! | New Rules For Train Ticket Irctc Booking

எனவே, நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், உங்களது IRCTC கணக்கில் இருந்து உங்கள் நண்பருக்கோ அல்லது வேறு யாருக்கேனும்

நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை செல்ல வேண்டும் அல்லது ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். இந்திய ரயில்வே அமைச்சகம், ரயில் டிக்கெட் முன்பதிவில் சில புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

நொடியில் டிக்கெட்; தட்கல் ரயில் டிக்கெட் புக் பண்ணும்போது.. இதை அவசியம் மறக்காதீங்க!

நொடியில் டிக்கெட்; தட்கல் ரயில் டிக்கெட் புக் பண்ணும்போது.. இதை அவசியம் மறக்காதீங்க!

அமைச்சகம் அறிவிப்பு

ரயில்வே சட்டத்தின் 143வது பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே மூன்றாம் நபரின் பெயரில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.

இனி.. நண்பர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் கடும் தண்டனை - அமைச்சகம் உத்தரவு! | New Rules For Train Ticket Irctc Booking

IRCTC-ல் கணக்கு வைத்திருப்பவர் தனக்கும் தன் குடும்பத்திற்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.