முன்பதிவு இல்லாமலேயே.. இனி வீட்டிலேயே ரயில் டிக்கெட் எடுக்கலாம் - விவரம்!
வீட்டில் இருந்தபடியே ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
UTS செயலி
சென்னை லோக்கல் ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில்வே நிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டியது இல்லை. இனி வீட்டில் இருந்தபடியே லோக்கல் ரயில் டிக்கெட்டுகளை எடுக்கலாம்.
இதற்காக புதிதாக UTS என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆன்லைன் முன்பதிவை செய்துகொள்ளலாம்.
டிக்கெட் முன்பதிவு
பிளாட்பார்ம் டிக்கெட்டுகள், புறநகர் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளை தங்கள் வீட்டிலிருந்து மற்றும் ஸ்டேஷனுக்கு வெளியில் இருந்து வாங்கலாம். டிக்கெட் முன்பதிவு செய்த இரண்டு மணி நேரத்திற்குள் நிலையத்தை அடைந்து அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முன்னதாக, 'ஜியோ ஃபென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், ஜியோ ஃபென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.