ரயில் டிக்கெட் புக் பண்றீங்களா? இனி இவங்களுக்கு மட்டும்தான் லோயர் பர்த் - முக்கிய அறிவிப்பு!
ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
lower berth
இந்திய ரயில்வேயின் புதிய உத்தரவின்படி, கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு லோயர் பர்த் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அவர்கள் டிக்கெட்களை புக் செய்யும் போது லோயர் பெர்த் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்காமல் இருந்தாலும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், 2 லோயர் பெர்த் 2 மிடில் பெர்த், மூன்றாவது ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரயில்வே அறிவிப்பு
இந்த இருக்கையில் அவரும் அல்லது அவருடன் பயணம் செய்பவர்களும் அமரலாம். அதே நேரத்தில், கரிப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும், 2 மேல் இருக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
மேலும், மூத்த குடிமக்களுக்கு அல்லது கர்ப்பிணி பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது TT அவர்களுக்கு லோயர் பெர்த் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடு செய்ய முடியும்.
இந்த விதிகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த விதிகளை சக பயணிகள் மதிக்கவில்லை எனில் நீங்கள் ஆர்டிஓவிடம் புகார் அளிக்கலாம்.