விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவரா? கண்டிப்பா இதை தெரிஞ்சுகோங்க.. இதுதான் விதி!
மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து லக்கேஜிற்கான விதிகளைத் திருத்தியுள்ளன.
விமானப் போக்குவரத்து
வழக்கமாக விமான பயணிகள் உள்ளுர் பயணங்களின்போது குறைந்தளவு தான் உடைமைகளை எடுத்துச் செல்வார்கள். ஆனால் வெளிநாடுகளுக்கு செல்பவா்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அதிகமான உடைமைகளை எடுத்து வருவார்கள்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து லக்கேஜிற்கான விதிகளைத் திருத்தியுள்ளன. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் 7 கிலோவிற்குக் குறைவான, ஒரு பையை மட்டுமே கையில் கொண்டு செல்ல வேண்டும்.
லக்கேஜ் விதி
முதல் வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸில் பயணம் செய்பவர்கள் அதிகபட்சம் 10 கிலோ எடையிலான பையை தங்களுடன் கொண்டு செல்ல முடியும் . இந்த பையின் உயரம் 55 சென்டிமீட்டருக்கு மிகாமலும், நீளம் 40 சென்டி மீட்டர் மற்றும் அகலம் 20 சென்டி மீட்டாருக்குள்ளும் இருக்க வேண்டும்.
முன்னதாக சமீபத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் விநியோகம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. எந்த விமான பாதையில் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.