நடுவானில் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் தேநீர் விநியோகம் - viral video!
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தேநீர் விநியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இண்டிகோ விமானம்
நாம் அன்றாட வாழ்க்கையில் பயணம் செய்யும் பேருந்துகள், ரயில்களில் செல்லும் போது ஓய்வுக்காகப் பேருந்து நிறுத்தப்படும் அப்போது தேநீர் விற்கப்படும். இது வழக்கமான ஒன்று தான். ஆனால் நடுவானில் இண்டிகோ விமானத்தில் தேநீர் விநியோகம் செய்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
இண்டிகோ விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி ஒருவர் விமானத்தில் தேநீர் விநியோகம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பொதுவாக விமானத்தில் பயணம் செய்த பல்வேறு பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் அனுமதிக்கப்படுவர்.
தேநீர் விநியோகம்
குறிப்பாகக் கையில் எடுத்துச் செல்ல மருத்து பொருள்களைத் தவிர மற்ற எதற்கும் அனுமதி இல்லை. அந்த வீடியோவில் பயணி ஒருவர் விமானத்தில் பிளாஸ்கில் தேநீர் வழங்கியுள்ளார். ஆனால் இதுவரை இண்டிகோ கேபின் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம் எந்த விமான பாதையில் இந்த சம்பவம் நடந்தது என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.