நடுவானில் பறந்த கொண்டிருந்த விமானம்.. கால்களை மேலே தூக்கி பயணம் செய்த சம்பவம் - நடந்தது என்ன?
நடுவானில் பறந்த கொண்டிருந்த விமானத்தில் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏர்லைன்ஸ் விமானம்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த டிசம்பர் 7ஆம் தேதி பயணிகளுடன் டல்லாஸில் இருந்து மினியாபோலிஸ் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது விமானம் நடுவானில் பறந்த கொண்டிருந்த போது பயணிகளின் இருக்கைக்கு அடியில் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் பீதி அடைந்தனர்.
இது குறித்து விமானப் பணிப்பெண் ஆய்வு செய்தார். அங்கு விமானத்தில் உள்ள ஒரு கழிவறையிலிருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானத்தில் தண்ணீர் பாய்ந்துள்ளது தெரியவந்தது.
தண்ணீர் கசிவு
இந்த சம்பவத்தால் பயணிகள் தங்கள் கால்களை மேலே தூக்கி, கீழே இருந்த தங்களது பொருட்களை மேலே எடுத்து வைத்து பயணம் செய்தனர். இது தொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட சம்பவம் போல், பல விமானங்களில் சமீபத்தில் பயத்தை தூண்டும் விதமாக அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.