அடேங்கப்பா.. சரமாரியாக எகிறிய விமான கட்டணம் - முழு விவரம் இதோ..
தொடர் விடுமுறை எதிரொலியாக விமான கட்டணம் அதிகரித்துள்ளது.
தொடர் விடுமுறை
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என தொடர் விடுமுறை வரவுள்ளது. இந்த நாட்களில் பலர் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. மேலும், சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
விமான கட்டணம்
அந்த வகையில், சென்னை- மதுரை இடையே வழக்கமாக 4,300 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 17,695 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னை - திருச்சிக்கான கட்டணம் 14,387 ரூபாயாகவும், கோவைக்கான கட்டணம் 9,418 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
சென்னை - கொச்சி இடையிலான விமான கட்டணம் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை- தாய்லாந்து இடையே வழக்கமாக 8,891 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 17,437 ரூபாயாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக பல விமானங்களில் டிக்கெட்கள் முழுமையாக முன்பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.