ரேஷன் அட்டைதாரர்களே மிஸ் பண்ணிடாதீங்க... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Tamil nadu Government of Tamil Nadu DMK
By Vidhya Senthil Jul 24, 2024 11:30 AM GMT
Report

 ரேஷன் அட்டடை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் பெற 2 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி அடுத்த மாதம் முதல் ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 ரேஷன் அட்டைதாரர்களே மிஸ் பண்ணிடாதீங்க... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | New Ration Smart Cards Tamil Govt Notification

நடந்து முடிந்த 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பனிகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான ஆய்வு பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டைகள் மூலம் சலுகை விலையில் விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பருப்புகள், பாமாயில் என தமிழக மக்களுக்கு தேவையான அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சி வந்தவுடன் புதிய ‘ஸ்மார்ட் கார்டு’கள் வழங்கும் முறையில் பெரும் மாற்றம் கொண்டு வந்தது .

மெலும் தமிழக முதல்வரின் உத்தரவின்படி விண்ணப்பித்த 30 நாட்களில் புதிய ஸ்மார்ட் கார்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

வாக்களிக்க Voter ID இல்லையா? இந்த ஆவணங்களில் ஒன்று போதும்!

வாக்களிக்க Voter ID இல்லையா? இந்த ஆவணங்களில் ஒன்று போதும்!

திமுக ஆட்சி

அதனால் புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சமாக இருந்த புதிய ரேஷன் கார்டு அதன்பின் 2022-ம் ஆண்டில் 10 லட்சம் அதிகரித்து 2 கோடியே 20 லட்சம் ஆனது.

ரேஷன் அட்டைதாரர்களே மிஸ் பண்ணிடாதீங்க... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! | New Ration Smart Cards Tamil Govt Notification

தற்போது நிலவரப்படி , தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன. இந்த நிலையில் , சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் புதிய ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் தான் புதிய கார்டுகள் வழங்கும் பணியின் போது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியது. இதானல் புதிய கார்டுகள் வழங்கும் பணிகள் நிறூஇத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது ஆய்வு பணங்கள் தொடங்கியது. அடுத்த மாதம் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.