புது ரேஷன்கார்டு எப்போது கிடைக்கும்? நீண்ட நாள் காத்திருப்பு - முக்கிய தகவல்!
புதிய ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
ரேஷன் கார்டு
தனி குடும்ப அட்டைக்காக ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். ஆனால், இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் கடந்த 5 மாதமாகவே மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், மகளிர் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே புதிய ரேஷன் கார்டு வழங்குவது நின்றுவிட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கள ஆய்வு
இந்நிலையில், இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் பேசுகையில், "புதிய ரேசன் கார்டுகள் மீதான கள ஆய்வு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. அதிகாரிகள் எப்போது செயல்பாட்டை அனுமதிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
அதற்கான உரிய நடவடிக்கை தொடங்க அனுமதி கிடைத்தவுடன், கள ஆய்வு பணிகளை தொடங்குவோம். ஆன்லைன் வழியாகவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.