ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு சூப்பர் ஆஃபர்.. இலவசமாக பெறலாம் - மோடியின் உத்திரவாதம்!
பிரதமர் மோடி ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு இலவச ஆஃபர் குறித்து பேசியுள்ளார்.
பொதுக்கூட்டம்
சத்தீஸ்கரின் துர்க் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, "நாட்டில் உள்ள 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க பாஜக அரசு சார்பாக முடிவு செய்துள்ளேன். உங்களது அன்பும் ஆசீர்வாதங்களும் எப்போதும் புனிதமான முடிவுகளை எடுக்க எனக்கு பலத்தைத் தருகின்றன" என்று கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ உணவுபொருட்களை அரசு தனிநபர்களுக்கு இலவசமாக வழங்கியது.
மோடியின் உத்திரவாதம்
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடியும் இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ நடவடிக்கை சில நாட்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இது 2024 லோக்சபா தேர்தலுக்கான தந்திரம் என்று விமர்சிக்கப்படும் நிலையில் இது அரசியல் வாக்குறுதி அல்ல, இது மோடியின் உத்தரவாதம்" என்றும் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ நடைமுறையில் இருப்பதால், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் 5 கிலோ உணவு தானியத்தை இலவசமாகப் பெற முடியும்.
மோடியின் உத்தரவாத அட்டை இந்தியாவின் எந்த மூலையிலும் உங்களை பட்டினி கிடக்க விடாது" என்று கூறினார்.