வாக்களிக்க Voter ID இல்லையா? இந்த ஆவணங்களில் ஒன்று போதும்!

India Lok Sabha Election 2024
By Sumathi Apr 04, 2024 06:35 AM GMT
Report

வாக்களிக்க உதவும் ஆவணங்கள் குறித்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை (Election Photo Identity Card) பயன்படுத்தி தேர்தல்களில் வாக்களிப்பது வழக்கம்.

வாக்களிக்க Voter ID இல்லையா? இந்த ஆவணங்களில் ஒன்று போதும்! | Identity Card Voting Election Commission Details

இந்நிலையில், EPIC அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்,

புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை, எம், எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், வங்கி மற்றும் அஞ்சல் பாஸ்புக்,

இங்கெல்லாம் அதிக பணப்புழக்கம் இருக்கு : அதிர்ச்சி தகவல் வெளியிட்ட தேர்தல் ஆனையம்

இங்கெல்லாம் அதிக பணப்புழக்கம் இருக்கு : அதிர்ச்சி தகவல் வெளியிட்ட தேர்தல் ஆனையம்

ஆவணங்கள் விவரம்

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு ஆகிய 12 அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்க Voter ID இல்லையா? இந்த ஆவணங்களில் ஒன்று போதும்! | Identity Card Voting Election Commission Details

மேலும், தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப்பை அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக கருத முடியாது. அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.