சென்னை-திருச்சி-மதுரை; மக்களுக்கு அடித்த ஜாக்பாட் - வருகிறது மிகப்பெரிய ஹைவே!
தமிழகத்தில் 25 புதிய நெடுஞ்சாலைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய நெடுஞ்சாலை
தமிழகத்தில் 6 ஆயிரத்து 600 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அண்டை மாநிலங்களுடன் இணைக்கபட்டுள்ளன.
இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2 ஆயிரத்து 170 கிலோ மீட்டர் தொலைவிற்கு 25 புதிய நெடுஞ்சாலைகளை அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
மத்திய அரசு முடிவு
இப்பணிக்கு, 85,515 கோடி ரூபாய் தேவைப்படும் என, தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் 2,000 கோடி செலவில் வெள்ளக்கோவில்-சங்ககிரி NH81-A 70 கிமீ நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.
சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இந்த திட்டம் மிகவும் முக்கியம். நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த 4,730 கோடி செலவில் கட்டப்படும் 164 கிமீ விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் புறவழிச்சாலையில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வழி வகுக்கும்.
தமிழகத்தில் ₹1 லட்சம் கோடி மதிப்பீட்டில் 2,781 கி.மீ.க்கு மொத்தம் 71 திட்டங்கள் வரவுள்ளன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் தஞ்சாவூருக்குச் சென்றபோது, தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக ₹1 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.