நடுக்கடலில் பற்றி எரிந்த 3,000 கார்கள்; இந்திய மாலுமி மரணம் - என்ன நடந்தது?
3,000 வாகனங்களை ஏற்றி சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
நெதர்லாந்து தீவுகளில் ஒன்றான அமிலாந்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் ஃப்ரேமண்டில் ஹைவே என்ற சரக்கு கப்பல் சென்ற போது திடீரென தீப்பற்றிக் கொண்டது. அப்போது, அதில் 25 பேர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக இருந்துள்ளனர்.
உயிர் பாதுகாப்பு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். சிலர் கடலில் குதித்து உயிர் தப்பிய நிலையில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்து விட்டதாகவும், அவர் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.
மாலுமி மரணம்
கப்பலில் எலக்ட்ரிக் கார்களும் இருப்பதால் அதன் பேட்டரிகள் தீப்பற்றினால் இன்னும் நிலைமை மோசமாகும் என்றும் கூறப்படுகிறது. தீ கொளுந்துவிட்டு எரிவதனால் கப்பலில் ஏரி தீயை அணைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
மேலும், இதில் 3,000 கார்கள் உள்ளதாகவும், இதில் எலக்ட்ரிக் கார்களும் உள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ முழுவதுமாக அணைந்த பின் கப்பலை வேறொரு கப்பலின் உதவியுடன் கரைக்கு இழுத்து வருவதோ அல்லது கப்பலை அங்கேயே கடலில் மூழ்கடிக்க செய்யவோ மட்டுமே முடியும்.
மற்றப்படி கப்பலை இயக்க முடியாது என நெதர்லாந்து நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.