4000 சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து - அதிர்ச்சி வீடியோ

ship fire-accident Mediterranean 4000-luxury-car 4000 சொகுசு கார் கப்பல் தீ விபத்து
By Nandhini Feb 21, 2022 04:55 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கடந்த புதன்கிழமை அன்று, சரக்கு கப்பல் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடல், போர்ச்சுகல் நாட்டின் அசோர்ஸ் தீவுகள் பகுதி வழியாக கடலில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அந்த சொகுசு கப்பல் தீப்பிடித்துக் கொண்டது. நடுக்கடலில் கப்பலில் தீ பற்றி எரியத் தொடங்கியது.

உடனடியாக கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து கப்பலில் சென்ற கப்பல் குழு உறுப்பினர்கள் 22 பேரை போர்ச்சுகல் கடற்படையினர் மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.

இந்த சொகுசு கப்பல் Porsche, பென்ட்லி, Audi, Lamborghini மற்றும் வோக்ஸ்வேகன் என்று சுமார் 4000 சொகுசு கார்களை சுமந்து சென்றது. கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் கார் எரிந்து சாம்பலாகி வருகின்றன.

மேலும், கப்பலில் தீ இன்னும் அணைக்கப்படவில்லை. தீயணைப்பு படகுகள் நேற்றுதான் கப்பலை நெருங்கியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி எப்போது முடியும் என்பது இப்போதைக்கு சொல்ல முடியாது என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.