நெடுஞ்சாலை இடிந்து விழுந்து கோர விபத்து - 24 பேர் உயிரிழப்பு!
China
Accident
Death
By Sumathi
நெடுஞ்சாலை இடிந்து விழுந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலை விபத்து
சீனா, குவாங்டாங் மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதுமே தண்ணீர் தேங்கியுள்ளது.
தொடர்ந்து, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையில் ஓடிய மழைநீரால் மெய்சூ நகருக்கும் டபு கவுன்ட்டிக்கும் இடையே நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
24 பேர் பலி
அப்போது சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனங்கள் அதற்குள் கவிழ்ந்து விழுந்தன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சுமார் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.