பெண் எம்.எல்.ஏ சாலை விபத்தில் மரணம் - அதிர்ச்சி சம்பவம்!
தெலுங்கானா எம்.எல்.ஏ லாஷ்ய நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாஷ்ய நந்திதா:
ஐதராபாத்தில், 1986 -ம் ஆண்டு பிறந்தவர் லாஷ்ய நந்திதா. 37 வயதான இவர் பிஆர்எஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தையின் மறைவுக்கு பின் அரசியலுக்கு வந்தார்.
அன்மையில் தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்றார்.
சாலை விபத்து:
இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் திரும்பியபோது சுல்தான்பூர் அருகே சாலை தடுபான் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே நந்திதா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதில் கார் டிரைவரும் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த விபத்தை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்