ஆம்பூர் அருகே சாலை விபத்து - 2 பாதிரியார்கள் உயிரிழந்த சோகம்!
திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 2 பாதிரியார்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக 2 பாதிரியார்கள் காரில், பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவர் மீது மோதி, தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த பாதிரியார்கள் விக்டர் மோகன் மற்றும் தாவீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.