ஆதார் கார்டில் புதிய மாற்றம்.. இனி இந்த விஷயத்துக்கு பயன்படுத்த முடியாது - அரசு அறிவிப்பு!
ஆதாரில் புதிய மாற்றம் கொண்டுவருவதாக அரசு அறிவித்துள்ளது.
அடையாள அட்டை
இந்தியாவில் ஆதார் அடையாள அட்டை வந்ததில் இருந்து ஓட்டுநர், உரிமம் பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது, வாக்காளர் அடையாள அட்டை பெற, வங்கி கணக்கு தொடங்க, வருமான வரி தாக்கல் செய்ய, அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது போன்ற அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆதார் கார்ட்டை இனி சில விஷயங்களுக்கு பயன்படுத்த முடியாத வண்ணம் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய மாற்றம்
இந்நிலையில், பலர் தங்களது பிறந்த தேதியை சரிபார்ப்பதற்காக ஆதார் அட்டையை காட்டுகின்றனர். ஆனால், இனி ஆதார் கார்டு மூலமாக இந்திய குடிமக்களின் பிறந்த தேதி, முகவரியை சரிபார்க்க முடியாது. மேலும், எந்த நிறுவனங்களிலும் இனி பிறந்த தேதி, முகவரி சரிபார்ப்பிற்காக ஆதார் கார்டு ஒப்படைத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதற்கு பதிலாக பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி மதிப்பெண் சான்றிதழை ஒப்படைக்கலாம். அதேபோல், முகவரி சான்றுக்கு குடியுரிமை சான்றிதழை ஒப்படைக்க வேண்டும்.
மேலும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கு ஆதார் அட்டையைக் காட்ட வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதனை ஆதார் அட்டைகளை நிர்வகிக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ இந்த முடிவுகளை எடுத்துள்ளது.