மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Madras High Court
By Thahir Dec 07, 2022 07:04 AM GMT
Report

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

மின் இணைப்பு எண்ணை, வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைக்கு குடியிருப்போர் அவர்களது ஆதார் எண்ணோடு இணைக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

அதற்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரையில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக இம்மாதம் முழுவதும் மின் அலுவலகத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல, இணையத்தில் இணைக்கவும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Case in Madras High Court against linking Aadhaar number with electricity connection number

அதில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க சொல்வதை தடை செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.