பெரும் நிலநடுக்கம், ஆட்டிப்படைக்கும் சுனாமி - பலித்தது புதிய பாபா வாங்காவின் கணிப்பு!
தீர்க்கதரிசி ரியோ டட்சுகியின் கணிப்பு கவனம் பெற்று வருகிறது.
சுனாமி பாதிப்பு
ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. வரலாற்றில் 70 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச நிலநடுக்கமாக இது பதிவு செய்யப்பட்டது.
ஜப்பானிலும் சுனாமி அலைகள் 12 அடி உயரத்திற்கு உயர்ந்தன. இந்நிலையில், எதிர்காலத்தை கணிப்பதில் உலகப்புகழ் பெற்ற நாஸ்ட்ராடமஸ், பாபா வாங்கா வரிசையில் ஜப்பான் நாட்டின் ரியோ டட்சுகியும் இடம்பெற்றுள்ளார்.
புதிய பாபா வாங்கா கணிப்பு
இவரை புதிய பாபா வாங்கா என்று அழைக்கின்றனர். முன்னதாக 2025 ஜூலை 5ஆம் தேதி ஜப்பானை பெரும் பூகம்பம், சுனாமி தாக்கும் என கணித்திருந்தார். இதனால் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது குறைந்தது.
அந்த நாளில் ஜப்பானில் மக்கள் ஜாக்கிரதையாக இருந்தனர். ஆனால் அன்று எந்த அசாம்பாவிதமும் நடக்கவில்லை. அதே ஜூலை மாதம் சில வாரங்கள் கழித்து பெரும் நிலநடுக்கமும் சுனாமியும் ஜப்பானின் வட பகுதியை தாக்கியுள்ளது. கணிப்பு தாமதமாக நடந்தாலும் நிஜமாகிவிட்டதாக கவனம் பெற்று வருகிறது.