சுனாமியில் தப்பிக்க மக்கள் செய்த செயல் - உயிர் பயத்தை கொடுத்த அறிவிப்பு!
ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கியுள்ளது.
சுனாமி தாக்கம்
ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. வரலாற்றில் 70 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச நிலநடுக்கமாக இது பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் பெரிய வடக்கு தீவான ஹெக்கைடோவின் கடலோர பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின. ரஷ்யாவை தொடர்ந்து ஜப்பானின் ஹோக்கைடோவில் முதல் முதலாக சுனாமி தாக்கியது.
மக்கள் வெளியேற்றம்
இங்கு 30 சென்டிமீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்தது. 133 மாநகராட்சிகளில் உள்ள 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
உயிருக்கு பயந்து பொதுமக்கள் தங்கள் வீடு, ஹோட்டல்களை விட்டு கார்களில் வெளியேறினர். இஷினோமாகி என்ற இடத்தில் 50 சென்டிமீட்டர் உயரத்துக்கு சுனாமி தாக்கியதில், மக்கள் அருகே உள்ள ஹியோரியா மலை மீது குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் அலஸ்கா, ஹவாய் மற்றும் அந்நாட்டின் தெற்கில் இருந்து நியூசிலாந்து வரையிலான கடல் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.