தாய்லாந்து போகவேண்டாம்; இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங் - என்ன காரணம்?
தாய்லாந்தை இந்திய சுற்றுலாப் பயணிகள் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
போர் பதற்றம்
தாய்லாந்து மற்றும் கம்போடியா அண்டை நாடுகளாகும். தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மகாணமும் இருநாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
தாய்லாந்தின் சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா முயென் தாம் எனும் கோவில் மீது கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக இருந்த மோதல் போராக மாறியுள்ளது. இந்த மோதல் காரணமாக மொத்தம் 14 பேர் உயிழந்துள்ளனர். மேலும் இருநாடுகளின் எல்லையில் இருந்து 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா எச்சரிக்கை
தொடர்ந்து கம்போடியா தூதரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட தாய்லாந்து அரசு, கம்போடியாவில் உள்ள தனது தூதரை திரும்ப அழைத்து கொண்டுள்ளது. இதற்கிடையில் இரண்டு நாடுகளும் அமைதி காக்க அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஐநாவும் இருநாடுகளை மோதலை கைவிடும்படி வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில், "தாய்லாந்து - கம்போடியா எல்லைக்கு அருகே நிலவும் சூழலை கருத்தில் கொண்டு
தாய்லாந்தில் உள்ள உபோன் ரட்சதானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சாந்தபுரி மற்றும் டிராட் ஆகிய 7 மாகாணங்களுகு்குச் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என அறிவித்துள்ளது.