அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா - எதில் தெரியுமா?
பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான நாடுகள்
Safety Index (பாதுகாப்பு குறியீடு), Numbeo 2025-ம் ஆண்டின் நடுத்தர காலமான ஜூன், ஜூலை மாத உலக நாடுகளின் பாதுகாப்பு நிலைகளை மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இதில், UAE - 85.22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், அந்தோரா (Andorra) - 84.83 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும், கத்தார் (Qatar) - 84.64 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கின்றன.
இந்தியா முன்னிலை
இலங்கை - 57.7 புள்ளிகள் பெற்று 61-வது இடத்திலும், பாகிஸ்தான் - 57.6 புள்ளிகள் பெற்று 62-வது இடத்திலும், இந்தியா - 55.8 புள்ளிகள் பெற்று 67-வது இடத்திலும் இருக்கின்றன. இங்கிலாந்து - 51.6 பெற்று 86-வது இடத்தையும், அமெரிக்கா - 50.8 புள்ளிகள் பெற்று 91-வது இடத்தையும் பெற்றிருக்கிறது.
இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் வெனிசுலா உள்ளது. பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னப்பிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா, பெரு ஆகிய நாடுகள் மோசமான பாதுகாப்பு கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன.
பாரம்பரியமாக பாதுகாப்பான நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா இதில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.