கூகுளில் இந்த 2 வார்த்தைகளை மட்டும் தேடிடாதீங்க - அப்புறம் அபராதம்தான்..
கூகுளில் நாம் தேடக்கூடாத சில விஷயங்கள் உள்ளன.
புதிய சட்டம்
ரஷ்யா சமீபத்தில் மொபைல் பயன்பாடு குறித்த புதிய சட்டத்தை அமல்படுத்தியது.
அதில், சில குறிப்பிட்ட வார்த்தைகள் அல்லது தலைப்புகளை இணையத்தில் தேடினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய சட்டம் இயற்றுபவர்கள் இணையத்தில் "தீவிரவாத" உள்ளடக்கத்தைத் தேடுபவர்களுக்கு $65 வரை அபராதம் விதிக்கும் விதிகளை அங்கீகரித்துள்ளனர். உதாரணமாக, LGBT இயக்கம் "பயங்கரவாதி" என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது.
மீறினால் அபராதம்
அதேபோல், அல்-கொய்தா அல்லது நாஜி சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் அனைத்தும் அடங்கும். அரசாங்கத்தின் பட்டியலில் 5,500க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட தலைப்புகள் மற்றும் குழுக்கள் உள்ளன. புதிய தலைப்புகள் விரைவாக சேர்க்கப்படுகின்றன.
VPN பயன்பாட்டை ஊக்குவிக்கும் எவருக்கும், தனிநபர்களுக்கு $2,500 வரையிலும், நிறுவனங்களுக்கு $13,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.