ரூ 5000-க்கு மேல் செலவு செய்ய இனி அனுமதி வாங்கணும் - அரசு ஊழியர்களுக்கு ஆர்டர்!
ரூ 5000-க்கு மேல் செலவு செய்ய அரசு ஊழியர்கள் இனி permission வாங்கணுமாம்.
இனி permission..
உத்தரகண்ட் அரசு வினோதமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், "ஒரு மாத ஊதியம் அல்லது ரூ. 5,000-ஐ விட அதிகமான மதிப்புள்ள எந்தவொரு அசையும்
சொத்தையும் விற்க அல்லது வாங்க அல்லது வேறு வழியில் பரிவர்த்தனை செய்யும்பொது எந்தவொரு அரசு ஊழியரும், அத்தகைய பரிவர்த்தனையை உடனடியாக அவர்களது உயர் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் பணியில் சேரும் போதும்,
அரசு உத்தரவு
அதற்குப் பிறகு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அனைத்து அசையாச் சொத்துக்களை குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினருக்கும் இது பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஊழியர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எஸ்சி-எஸ்டி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் கரம் ராம், இந்த உத்தரவு அபத்தமானது. வீட்டில் மனைவி , குழந்தைகளுக்காக நீங்கள் வாங்கச் செல்லும் கிட்டத்தட்ட எல்லாமே ரூ. 5,000 க்கும் அதிகமாக செலவாகும்.
உங்க மனைவிக்கு சேலை வாங்கணும்னா, அதுக்கும் துறைத் தலைவரிடம் அனுமதி வாங்கணுமா? குழந்தைகளுக்கு துணி வாங்க அனுமதி வாங்கணுமா? ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ரூ.5,000 என்ற வரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.