இனி முடியாது.. திடீர் முடிவெடுத்த நெட்ஃபிளிக்ஸ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நெட்ஃபிளிக்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் திருத்தம் ஒன்றை செய்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ்
பிரபல OTT தளமாக அதிக பயனாளர்களைக் கொண்டு நெட்பிளிக்ஸ் விளங்கி வருகிறது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தணிக்கை செய்யப்படாத காட்சிகளும் குறிப்பிட்ட படத்தின் இயக்குனரின் பிரத்தியேக காட்சிகளும் இடம்பெறுவது வழக்கம்.
இந்நிலையில், சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தின் கடவுச்சொல் குறித்த வரைமுறையை வெளியிட்டிருந்தது. தற்போது, இந்திய படங்களின் அன்கட் வெர்ஷனை ரிலீஸ் செய்யப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது.
அன்கட் வெர்ஷன்
நெட்ஃப்ளிக்ஸின் இந்த நகர்வுக்கு சென்சார் போர்டின் மறைமுக அதிகார அழுத்தம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகளுக்கு எச்சரிக்கை வாக்கியங்கள் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்தியப் படங்களை தணிக்கை செய்யாமல் வெளியிடுவதில் தனித்து தெரிந்த நெட்ஃப்ளிக்ஸின் இந்த நடைமுறை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.