Netflix பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இப்படி செய்தால் சிறை தண்டனை

Netflix
By Irumporai Apr 01, 2023 05:36 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நீங்கள் உங்கள் லாக் இன் விவரங்களை பகிர்ந்துகொள்ளும் நபராக இருந்தால் உங்களுக்கு சிறை தண்டனை உண்டு என்ற அதிர்ச்சி தகவலை NETFLIX அறிவித்துள்ளது.

NETFLIX ஓடிடி தளம்

கடந்த சில நாட்களாகவே ஓடிடி தளங்கள் மக்களிடையே அதிக அளவில் பிரபலமாகிவிட்டன. பல ஓடிடி தளங்கள் மக்கள் விரும்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , இணைய தொடர்கள் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே NETFLIX ஓடிடி தளம் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூல்ஸை வெளியிட்டுள்ளது .

Netflix பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இப்படி செய்தால் சிறை தண்டனை | Shocking Netflix Other Ott Users Jail

சிறை செல்லும் நிலை

அதன்படி கணக்கின் கடவுச்சொல் அதாவது பாஸ்வர்டை யாருடனும் பகிர்ந்து கொண்டால், அவ்வாறு செய்வது உங்களை சிறை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளக்கூடும். ஏனெனில், அவ்வாறு செய்வது இப்போது மோசடி வகையின் கீழ் வந்துவிட்டது.

இனி அப்படி செய்வது குற்றமாக கருதப்படும், இதற்காக நீங்கள் சிறைத்தண்டனை அல்லது கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். என அறிவித்துள்ளது. NETFLIX அறிவித்துள்ள இந்த புதிய விதி இங்கிலாந்தில் அமலில் உள்ளது என்றாலும் இந்தியாவில் நடைமுறைக்கு வரவில்லை