நெட்பிளிக்ஸில் இனி புதிய மாற்றம் - ஜியோ, அமேசானுக்கு இறங்கிய இடி!
நெட்ஃபிளிக்ஸ் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ்
இந்தியாவில் ஓடிடி தளங்களான ஜியோ, ஹாட்ஸ்டார், அமேசான், நெட்ஃபிளிக்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் விளையாட்டுப் போட்டிகளை நேரலை செய்வதை ஓடிடி வெற்றிக்கான யுக்தியாக பார்க்கின்றனர்.
ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பியதாலேயே ஹாட்ஸ்டார் அதிகப்படியான சந்தாதாரர்களை பெற்றது. ஜியோ சினிமாவின் வெற்றிக்கும் விளையாட்டுப் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்புவது முக்கிய காரணமாக உள்ளது.
WWE ஒப்பந்தம்
இந்நிலையில் அந்த வரிசையில் நெட்பிளிக்ஸ் இணைகிறது. அடுத்தாண்டு மார்ச்-க்கு பின் 10 ஆண்டுகளுக்கு புகழ்பெற்ற டபிள்யுடபிள்யுஇ (WWE) மல்யுத்த போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டு ஒப்பந்தம் சோனி நிறுவனத்துடன் நிறைவடைந்த நிலையில், அதன் பிறகு நெட்பிளிக்ஸ் தளத்தில் அந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது.
சர்வதேச அளவில் ஏற்கனவே என்எஃப்எல், பாக்ஸிங் எனப் பல போட்டிகளை நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.