அறிமுகமான புதிய ராயல் என்பீல்டு; அடேங்கப்பா.. இவ்வளவு சிறப்பம்சமா?
புதிய கோவான் கிளாஸிக் 350 ராயல் என்ஃபீல்டு பைக் அறிமுகமாகியுள்ளது.
Goan Classic 350
பிரபல ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பாபர் ஸ்டைல் பைக்கான கோவான் கிளாஸிக் 650-ஐ (Goan Classic 350) என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் நாளை (நவம்பர் 22) முதல் நவம்பர் 24 தேதி வரை கோவாவில் மோட்டோவெர்ஸ் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் நவம்பர் 23ம் தேதியன்று புதிய கோவான் கிளாஸிக் பைக்கை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டின் 350 சிசி பைக்குகள் உருவாக்கப்பட்ட J பிளாட்ஃபார்மிலேயே இந்த கோவான் கிளாஸிக் பைக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. டியர் டிராப் வடிவ எரிபொருள் டேங்க், ரெடரோ-ஸ்டைல் வட்ட வடிவ LED முகப்பு விளக்கு, டிஜி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
புதிய நிறம், வீல்கள், ஸ்போக்குகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் வெள்ளை நிறத்தைக் கொண்ட டயர்களும் உள்ளது. ஹேண்டில் பார் U வடிவில் வழக்கமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இருப்பதை விட சற்று உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. சீட் உயரம் வெறும் 750 மிமீ தான்.
349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு J சீரிஸ் இன்ஜினையே கொடுத்துள்ளனர். இந்த இன்ஜினானது 20.2hp பவர் மற்றும் 27Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கிளாஸிக் 350 பைக்கானது ரூ.1.93 லட்சம் முதல் ரூ.2.30 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் தற்போது விற்பனையாகி வரு்கிறது.