என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம்
எனது மகனை செய்தது போல் அவரது மகளையும் கொ* செய்திருக்கலாம் என கவின் தந்தை பேட்டியளித்துள்ளார்.
ஆணவ கொலை?
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இருவரும் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு சுர்ஜித் என்ற 24 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவரது மகளும், ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியின் மகனான கவின் குமாரும் (26) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கவின் குமார் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இந்த விவகாரம் வீட்டில் தெரிந்ததால், கவின் குமார் பழங்குடியின சமூகம் என்பதால் பெண் வீட்டார் இந்த பழக்கத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆத்திரத்தில் பெண்ணின் சகோதரர் சுஜித் கவின்குமாரை பேச அழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்தார்.
கவின் தந்தை ஆவேசம்
இதில் கவின் உயிரிழந்தார். இந்நிலையில் எனது மகனை செய்தது போல் அவரது மகளையும் கொ* செய்திருக்கலாம் அல்லவா. அப்படி செய்திருந்தால் நான் பாராட்டி இருப்பேன். எனது கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்காது. எஸ்பி நினைத்தால் உடனே அவர்களை பிடித்திருக்கலாம்.
எங்களை மட்டும் இரவு நேரம் என்றும் பாராமல் வீடு புகுந்து தூக்கிச் செல்கிறீர்கள். தங்களுக்கு அரசு சார்பில் நிதி வேண்டாம். நீதி வேண்டும். இந்த கொலைகள் தொடர்புடைய குற்றவாளியின் பெற்றோரை கைது செய்யவேண்டும் என்று கவின் தந்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து எஸ்.ஐ. தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரியை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், சுர்ஜித்தை போலீசார் கைது செய்த நிலையில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.