தந்தை கண்முன்னே மாணவியை கத்தி குத்து - இளைஞர் வெறிச்செயல்!
ஒருதலைக் காதலால் மாணவிக்கு கத்திக் குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல்
ராணிப்பேட்டை, மேல்நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரி பஸ்சில் இருந்து இறங்கி தனது தந்தை உடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இளைஞர் வெறிச்செயல்
அப்போது இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து, இடது கை பகுதிகளில் வெட்டி விட்டு, மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றார். இதில் பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கவியரசு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியை 3 ஆண்டுகளாக கவியரசு ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். காதலிக்க மறுத்த காரணத்தால் அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.