காதலியையும், 6 மாத குழந்தையையும் கழுத்தறுத்து கொன்ற காதலன் - அதிர்ச்சி பின்னணி!
காதலியையும், 6 மாத குழந்தையையும் காதலன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்டிய சந்தேகம்
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனல்(22). இவரை நிகில் என்பவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இதில் சோனல் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் இருவரும் பெரிதாக சம்பாதிக்காத நிலையில், குழந்தையை கலைக்க முடிவு செய்துள்ளனர். இருப்பினும் காலம் கடந்துவிட்ட நிலையில், சோனலுக்குக் குழந்தை பிறந்து அதனை 2 லட்சம் ரூபாய்க்கு வேறொரு பெற்றோருக்கு விற்றுவிட்டனர்.
பின் இருவரும் டெல்லியில் குடியேறியுள்ளனர். அங்கு சோனலுக்கு அதே பகுதியில் வசிக்கும் ரேஷ்மி என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அடிக்கடி ரேஷ்மி வீட்டிற்கு சோனல் சென்றுள்ளார். இதனால் ரேஷ்மியின் கணவர் துர்கேஷுடன் சோனலுக்குத் தொடர்பு இருப்பதாக நிகில் சந்தேகித்துள்ளார்.
காதலன் வெறிச்செயல்
மேலும் இருவரின் வாட்ஸ்அப் சாட்டிங்கைப் பார்த்த நிகில் சந்தேகத்தை உறுதி செய்துள்ளார். இதற்கிடையில், சோனல் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இக்குழந்தையைக் கலைக்க வேண்டாம் என்றும் இக்குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்றும் நிகில் தெரிவித்துள்ளார்.
ஆனால் சோனல் நிகிலுக்குத் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று கருவைக் கலைத்துள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சோனல் ரேஷ்மியின் வீட்டிற்குச் சென்று அங்கு வசிக்க ஆரம்பித்துள்ளார். பின் நிகில் அடிக்கடி போன் மூலம் சமாதானமாகப் பேசி மீண்டும் வீட்டிற்கு வரும்படி சோனலைக் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மறுத்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சோனல் மற்றும் ரேஷ்மியின் 6 மாத குழந்தை வாயில் டேப்பை ஒட்டி அவரது கழுத்தை அறுத்து நிகில் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். தற்போது அவரை கைது செய்துள்ள போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.