20 தோசை சாப்பிடுவேன்; நீயா நானாவில் டிரெண்டான இளைஞர் - ரயிலில் அடிபட்டு பலி!
நீயா நானாவில் டிரெண்டான இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
ரயில் விபத்து
நீயா நானா ஷோவின் மூலம் டிரெண்டானவர் தான் பிரணவ்(22). தன் மகன் 20 தோசை வெரைட்டி வெரைட்டியாக சாப்பிடுவான் என தாய் கூறிய சம்பவம் கவனம் பெற்றது.
அதன்பின், யூடியூப் சேனலுக்கும் அவர் தன் அம்மா மற்றும் தங்கையோடு பேட்டி அளித்திருந்தார். அதில் 25 தோசை சாப்பிட்டும் காட்டி இருந்தார்.
இருவர் பலி
இந்நிலையில், இவர் மொபைல் போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். அவரோடு தண்டவாளத்தை கடக்க முயன்ற சதீஷ் என்பவரும் உயிரிழந்துள்ளார். இருவரும் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள்.
யார் சாமி அவன்.. எனக்கே பாக்கணும் போல இருக்கு.. ?
— Vijay Television (@vijaytelevision) February 10, 2024
நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana pic.twitter.com/2yLVGRjkNn
விபத்தை தொடர்ந்து தாம்பரம் ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் தங்கள் பைக்கை ரயில்வே பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, தண்டவாளத்தின் வழியாக குறுகிய பாதையில் சென்று பார்க்கிங்கை அடைய முடிவு செய்தனர். அப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.