ரயில் விபத்து : தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பா ? - வெளியான அதிர்ச்சி தகவல்

By Irumporai Jun 03, 2023 05:25 AM GMT
Report

ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 ஒடிசா ரயில் விபத்து

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹாநகர் சந்தை ரயில் நிலைய பகுதியில் கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவரா நகருக்கு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (தடம் புரண்டரயில்) மீது மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியது.

ரயில் விபத்து : தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பா ? - வெளியான அதிர்ச்சி தகவல் | Train Accident 35 People Die Information

இந்த கோர விபத்தின் காரணமாக பாலசோர் ரயில் தடம் வழியாக செல்லக்கூடிய 7 ரயில்கள் டாடா நகர் ரயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும், அவ்வழியாக செல்ல இருந்த 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

35 பேர் உயிரிழப்பு

இந்த நிலையில் இந்த நிலையில், ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலி என வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இரயில் விபத்தில் விபத்துக்குள்ளானோர் குறித்து விவரங்கள் அறிய 1070 என்ற இலவச எண்ணிலும், 94458 69843, 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், 044 2859 3990 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28447701, 044-28447703 எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.