அடுத்த முறை சிறப்பாக விளையாடி தங்கம் வாங்கணும் - நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
பிரான்ஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாம்பியனுமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வெற்றி பெற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் பெற்று நிலையில் , இவர் மூலம் மீண்டும் தங்கப் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்தது.
நீரஜ் சோப்ரா
எனினும், தற்போது வெள்ளி வென்றதன் மூலம், அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற 4-வது இந்தியர் என்ற சாதனையை நீரஜ் படைத்துள்ளார்.
இந்த நிலையில் ,ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
அதில் தங்கப்பதக்கம் வெல்ல முடியவில்லை என்று கவலை கொள்ள வேண்டாம்; அடுத்த முறை இன்னும் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வெல்லலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.