100 மில்லி கிராம் தங்கத்தில் தங்க மகன் நீரஜ் சோப்ராவின் சிற்பம்
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு 100 மில்லி கிராம் தங்கத்தில் சிற்பம் செதுக்கி கோவையைச் சேர்ந்தவர் அசத்தியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யு.எம்.டி ராஜா. இவர் ஒவ்வொரு சிறந்த நிகழ்வுகளையும் தங்கம், வெள்ளி, குண்டு பல்புகள் உள்ளிட்ட இதர பொருட்களால் சிற்பமாக்குபவர்.
அவ்வாறு இவர் செய்த சிற்பங்கள் நாடு முழுவதும் பேசப்பட்சவையாகவும் இருந்திருக்கின்றன.
இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவு போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதி போட்டியில் தங்கபதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது யு.எம்.டி. ராஜாவை ஈர்த்துள்ளது.
இதனிடையே, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் யு.எம்.டி ராஜா 100 மில்லி கிராம் அளவிளான தங்கத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டி எரிவது போல் சிற்பத்தை செதுக்கியுள்ளார்.
இவரது இந்த சிற்பம் மக்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.