தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உருவாக்க வேண்டும் - வெங்கடேசன் எம்.பி
தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மனிதச் சங்கிலி பேரணி
தமிழகம் முழுவதும் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி விசிக, இடதுசாரிகள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், மதுரையில் எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் மனிதச் சங்கிலி பேரணி நடந்து வருகிறது. இதில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி என பல இயக்கங்கள் பங்கேற்றனர்.
அரசியல் பதற்றத்தை உருவாக்க வேண்டும்
அப்போது பேசிய எம்பி சு.வெங்கடேசன், தமிழ்நாட்டில் அரசியல் பதற்றத்தை உருவாக்க வேண்டும். வெறுப்பை உருவாக்கி அதில் வாக்கு வங்கி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது.

இந்த பேரணியில் சேர்ந்த கைகள் மனித கைகள் அல்ல, பகுத்தறிவு கரங்கள். இந்த பேரணி வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டும் என தெரிவித்தார்.