நான் இறந்துவிட்டேனா..? சாபம் விட்டிருக்கலாம்; கதறியழுத அப்துல் ஹமீது - வைரல் வீடியோ!

Tamil Cinema Actors Tamil TV Shows Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 25, 2024 09:38 AM GMT
Report

தான் இறந்துவிட்டதாக பரவிய வதந்திகள் குறித்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை அப்துல் ஹமீது பதிவிட்டுள்ளார். 

அப்துல் ஹமீது

பிரபல தொலைகாட்சி தொகுப்பாளராக ஒருகாலத்தில் வலம் வந்தவர் அப்துல் ஹமீது. தனது கம்பீர குரலால் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை யாரும் மறந்துவிட முடியாது. குறிப்பாக அவரின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

நான் இறந்துவிட்டேனா..? சாபம் விட்டிருக்கலாம்; கதறியழுத அப்துல் ஹமீது - வைரல் வீடியோ! | Nchor Bh Abdul Hameed About His Death Rumours

இதனிடையே அப்துல் ஹமீது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறந்துவிட்டதாகவும் தகவல் பரவின. இந்நிலையில் இந்த வதந்திகள் குறித்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில் அப்துல் ஹமீது பேசுகையில் "நம் எல்லோரையும் படைத்த ஏக இறைவன் திருவருள் உங்கள் அனைவர் மீதும் பொழிவதாக.

மாண்டவன் மீண்டு வந்து பேசுகிறானே என்று சிலர் வியந்து நோக்கக் கூடும். இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியைக் கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்புள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்ட பின்புதான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அதிலும் சிலர் என் குரலை கேட்டு கதறி அழுததை என்னால் தாங்க முடியவில்லை.

இத்தனை ஆயிரம் அன்புள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என்று நினைத்துக் கொண்டேன். நேற்று இலங்கை பத்திரிகைகளில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது, 'மரணம் மனிதனுக்குத் தரும் வரம். அவனை பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து, அவனைப் பற்றிய நல்ல பக்கங்களை, நல்ல நினைவுகளை மட்டும் இறைமீட்டி பேசி மகிழ்வது' என்று எழுதியிருந்தேன்.

இப்போது அப்படியொரு அனுபவம்தான் எனக்கு கிடைத்திருக்கிறது. பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் என்னை நேசித்தாலும், என்னுடைய துறை சார் பொறாமை காரணமாக அல்லது மத மாச்சரியங்கள் கொண்ட விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர், இதுவரை காலமும் என்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பியிருக்கலாம்.

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' பட நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' பட நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மூன்றாவது முறை

ஆனால், என்னுடைய இறப்புச் செய்தியைக் கேட்டது என்னைப் பற்றிய நல்ல நினைவுகளை இறைமீட்டி இருப்பார்கள். இது நான் வாழும் காலம்வரை தொடர வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

நான் இறந்துவிட்டேனா..? சாபம் விட்டிருக்கலாம்; கதறியழுத அப்துல் ஹமீது - வைரல் வீடியோ! | Nchor Bh Abdul Hameed About His Death Rumours

இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம். ஆம். முதல் அனுபவம் 1983-ம் ஆண்டு. இனக்கலவரத்தின்போது என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொளுத்தி எரித்துவிட்டார்கள் என்ற வதந்தி இங்கு இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும், தமிழ் பத்திரிகைகளிலும் பரவி, கேரளத்து மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்ததை என்னுடைய 'வானிலையில் வழிப்போக்கன்' என்னும் நூலில் பதிவு செய்திருந்தேன்.

இது முதல் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் யூடியூப் தளத்தில் ஒருவர் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில் என்னுடையப் புகைப்படத்தைப் போட்டு, 'பிரபல டிவி தொகுப்பாளர் மரணம். கதறி அழுதது குடும்பம்' என்ற செய்தியை பதிவு செய்திருந்தார். அது இரண்டாவது முறை. இப்போது சமூகவலைதளங்களில் நான் இறந்துவிட்டதாக செய்திகள் பரவியிருக்கிறது. இது மூன்றாவது முறை.

மூன்று முறை நான் உயிர்த்தெழுதிருக்கிறேனா என்று நகைச்சுவையாகத் தோன்றுகிறது. நாம் இறந்த பிறகு நம் மீது உண்மையான அன்பு வைத்திருந்தவர்கள் யார் யார் என்பதைப் பார்க்க நாம் இருக்கமாட்டோம். ஆனால், வாழும் காலத்திலேயே அதைக் கணிக்க, அறிந்துகொள்ள இறைவன் எனக்குக் கொடுத்த சந்தர்ப்பம்தான் இது. இந்தச் செய்தியை முதல் முதலில் பரப்பியவருக்கு எத்தனையோ பேர் சாபம் விட்டிருக்கலாம்.

அந்த சாபங்களிலிருந்து அந்த மனிதரைக் காக்கும் படி அதே இறைவனிடம் நான் வேண்டுகின்றேன். ஏதோவொரு நன்மையைச் செய்திருக்கிறார் அவர். ஆகவே, அன்புள்ளங்களே எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும்.. வணக்கமும்" என்று தெரிவித்துள்ளார்.