'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' பட நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Actors Hollywood Movies Death Hollywood World
By Jiyath Jun 25, 2024 03:01 AM GMT
Report

நடிகர் டமாயோ பெர்ரி உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

டமாயோ பெர்ரி

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தில் நடித்து உலகளவில் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் டமாயோ பெர்ரி (49). மேலும், ப்ளூ கிரஷ், ஹவாய்-ஓ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கடல் சாகசப் பிரியரான டமாயோ, அலையில் சறுக்கி விளையாடும் கடல் ஸர்பிங் சாகசத்தில் பயிற்சி பெற்றவர். இந்நிலையில், ஹவாய் தீவிலுள்ள கோட் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் ஸர்பிங்கில் ஈடுபட்டுள்ளார். 

நான் இறந்துவிட்டேனா..? சாபம் விட்டிருக்கலாம்; கதறியழுத அப்துல் ஹமீது - வைரல் வீடியோ!

நான் இறந்துவிட்டேனா..? சாபம் விட்டிருக்கலாம்; கதறியழுத அப்துல் ஹமீது - வைரல் வீடியோ!

மரணம் 

அப்போது டமாயோவை சுறா மீன் கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து படுகாயங்களுடன் கடலில் உயரிக்கு போராடிய அவரை, மீட்புப் படையினர் கரைக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். 

ஆனாலும், அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டதாக கடல் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். டமாயோ பெர்ரியின் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.