மறக்குமா நெஞ்சம் ; நிகழ்ச்சியில் பங்கேற்காதவருக்கு ரூ.67,000 அபராதம் - அதிரடி உத்தரவு!

A R Rahman Chennai
By Swetha May 04, 2024 05:25 AM GMT
Report

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு ரூ.67 ஆயிரம் அபராதம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மறக்குமா நெஞ்சம் 

இந்தியாவின் முன்னணி திரைப்பட இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரது 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக நிகழ்ச்சி நவம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தயது.

மறக்குமா நெஞ்சம் ; நிகழ்ச்சியில் பங்கேற்காதவருக்கு ரூ.67,000 அபராதம் - அதிரடி உத்தரவு! | Fine For Who Cannot Participate In Ar Rahman Show

நவம்பர் மாதம் நடந்த நிகழ்சசியில் ஏகப்பட்ட சொதப்பல்கள் நடந்தது. டிக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் போடப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவஸ்த்தைப்பட்டனர். பலர் பார்க்காமல் வீடு திரும்பினர்.

கலவர பூமியான ஏ.ஆர்.ரகுமான் Concert.....ஸ்க்ரீனை கிழித்து உள்ளே நுழைந்த ரசிகர்கள்

கலவர பூமியான ஏ.ஆர்.ரகுமான் Concert.....ஸ்க்ரீனை கிழித்து உள்ளே நுழைந்த ரசிகர்கள்

அதிரடி உத்தரவு

இந்த நிலையில், கரூரில் வசித்து வரும் அஸ்வின் மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியை பார்க்க ரூ.12 ஆயிரத்துக்கு டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் நிகழ்ச்சி மாற்றப்பட்டதால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தை தொடர்பு கொண்டு,தங்களால் கலந்து கொள்ளமுடியாத சூழ்நிலையை குறித்து கூறியுள்ளார்.

மறக்குமா நெஞ்சம் ; நிகழ்ச்சியில் பங்கேற்காதவருக்கு ரூ.67,000 அபராதம் - அதிரடி உத்தரவு! | Fine For Who Cannot Participate In Ar Rahman Show

மேலும், டிக்கெட் கட்டணத்தை திரும்ப தரும்படி கூறினார். அதற்கு நிறுவனமும் கட்டணத்தை திரும்ப அளிப்பதாக கூறியது. ஆனால் கடைசி வரை கட்டணம் திருப்பி வழங்கப்பவில்லை.இதனையடுத்து. அஸ்வின் மணிகண்டன் சார்பில் கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த ஆணையம்,அஸ்வின் மணிகண்டனுக்கு டிக்கெட் தொகை ரூ.12 ஆயிரம், இழப்பீடு ரூ.50 ஆயிரம், செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.67 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என ஏசிடிசி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.