பாலியல் சீண்டலும், ஏமாற்றங்களும்..!! ரகுமான் பொறுப்பேற்றும் பதில் இல்லாத கேள்விகள்..!!

A R Rahman M K Stalin Tamil nadu Chennai
By Karthick Sep 11, 2023 10:46 AM GMT
Report

நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவங்களுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மறக்குமா நெஞ்சம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நேற்றைய தினம் சென்னையில் ஈ.சி.ஆர்'யில் இசைநிகழ்ச்சி நடத்தினர். மறக்குமா நெஞ்சம் என பெயரில் பனையூரில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றவுள்ளதாக தற்போது வரை குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து இணையத்தளத்தில் எழுப்பப்பட்டு வருகின்றது.

who-is-responsible-for-misleadings-in-arr-concert

ACTC என்ற தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெடுப்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 5000 ரூபாய்யில் துவங்கி 20 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை மிகவும் மும்முரமாக நடைபெற்று முடிந்த நிலையில், இதில் பலரும் நேற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

டிக்கெட் வாங்கிய பலபேருக்கு தங்களுக்கு சரிவர எங்கே இருந்து நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு செல்ல வேண்டும் என்பது சரிவர தெரிவிக்கப்படவில்லை என்பதில் துவங்கி, பார்க்கிங் வசதி இல்லை, உள்ளே செல்ல அனைவர்க்கும் ஒரே கியூ என பலவற்றிலும் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன.

டைமண்ட் டிக்கெட் வாங்கி கூட உள்ளே செல்ல முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். அதிகப்படியான கூட்டம், சில பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் என பல அநாகரீகமாக செயல்களும் நடைபெற்றுள்ளது.

யார் பொறுப்பு..?

இதில், ஈ.சி.ஆர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் வாகனமும் சிக்கி தவித்த தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றது.

ACTC என்ற தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெடுப்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 5000 ரூபாய்யில் துவங்கி 20 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை மிகவும் மும்முரமாக நடைபெற்று முடிந்த நிலையில், இதில் பலரும் நேற்று ஏமாற்றமடைந்துள்ளனர். 

இது குறித்து தற்போது தாம்பர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் ஆய்வு நடத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் தற்போது விசாரணையும் நடத்தப்பட்டு வருகின்றது. இசை நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட அளவை விட டிக்கெட் விநியோகம் நடைபெற்ற காரணத்தினால் தான் இது நடைபெற்றது என கூறினால் இந்த இன்னல்களுக்கெல்லாம் தற்போது ஏ.ஆர். ரகுமான் பொறுப்பெற்ற நிலையிலும், இன்னும் பல கேள்விகள் நீண்டு கொண்டே போகின்றன.